குடிகாரர்கள் எங்கே? டாஸ்மாக் கடைகளில் குறைய தொடங்கிய வருமானம்…!
Liquor sales in Tasmac getting down

சென்னை:
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் மே 7ம் தேதி முதல் வாரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் கடைகள் மூடப்பட்டன. மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் கடைகளை திறக்கலாம் என்று அனுமதி தந்தது. பின்னர் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனையும் நடைபெற்று வருகிறது.
மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் குடிகாரர்கள் உற்சாகமாக சென்று மதுபானங்களை வாங்கி மகிழ்ந்தனர். முதல் நாளில் 163 கோடி ரூபாய் மது விற்பனை ஆனது. அடுத்த நாள் 133 கோடி ரூபாயாக குறைந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை 91.5 கோடியாக இருந்தது. சில நாட்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த மதுரையிலும் விற்பனை மந்தமானது. திருச்சி முதலிடத்தை பெற்றுள்ளது. திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய மண்டலங்களில் டாஸ்மாக் வசூல் 20 கோடியை கடந்துள்ளது.















