ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை அப்போலோ அறிக்கை
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறிய அறுவைசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் சார்பில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பின்னர் நேற்று இரவு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஸ்டாலின் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறிய அளவிலான அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் இருந்த நீர்க்கட்டி அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சைக்கு பின் இன்று மதியம் மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.