fbpx
RETamil Newsதமிழ்நாடு

வீட்டிலேயே கணவர் பார்த்த சுகப்பிரசவம்! சுகாதாரத்துறை அதிர்ச்சி

தேனி : கணவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனீ மாவட்டம் போடி அருகிலுள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் தனுஷ்கோரி. இவரது மகன் கண்ணன் வயது 27,  இவர் தன்னுடைய மனைவி மகாலட்சுமியுடன் வசித்துவந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான அவருடைய மனைவி மகாலட்சுமிக்கு பிரசவவலி ஏற்பட்டதால் கணவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இத்தகவலை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு ஒரு மருத்துவ குழுவுடன் சென்றனர்.அவர்கள் தொப்புள்கொடியை நீக்க வேண்டும் என்று கூறினர். அதை மறுத்து கண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பலமணிநேர வாக்குவாதத்திற்கு பின் அவர் தொப்புள்கொடியை அகற்ற சம்மதம் தெரிவித்ததால்
தொப்புள்கொடி அகற்றப்பட்டது.இதை தொடர்ந்து மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தை தனுஷ்கோரி கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்னதாக திருப்பூா் மாவட்டத்தில் தம்பதி ஒன்று மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பாா்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே மருத்துவமனைக்கு செல்லாமல் இணையதள வீடியோக்களை பாா்த்து வீட்டிலேயே பிரசவம் பாா்க்க அந்த தம்பதி முடிவு செய்தது.

அதன்படி பிரசவமும் நடைபெற்றது. குழந்தை பிறந்தது அனால் தாய் உயிரிழந்தாள்.

இது தொடா்பாக அப்பெண்ணுடைய உறவினா்கள் அளித்த புகாரால் கணவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் கோவை மாட்டத்தில் வீட்டில் வைத்தே பிரசவம் பாா்ப்பதற்கு வருகிற 26ம் தேதி கோவை மாவட்டம், கோவை புதூா் பகுதியில் ஒரு நாள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தனியாா் அமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டது. அந்த தனியார் அமைப்புமீதும் நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிலேயே ஒரு தம்பதியால் வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை அதிர்ச்சியில் உள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close