fbpx
Tamil Newsஉணவு

வேப்பம்பூ ரசம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் ;

புளி 1 எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 சிறு துண்டு
வேப்பம்பூ 1 ஸ்பூன்
வற்றல் மிளகாய் 3
தேவையான உப்பு

செய்முறை;

300 மில்லி புளிநீரில் உப்பு , பெருங்காயம், இவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும். புளிவாசனை போனதும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வற்றல் மிளகாயை கிள்ளிப் போட்டு வறுக்கவும், அவை பொன்னிறமானவுடன் வேப்பம்பூவை போட்டு நன்கு வறுத்து ரசத்தில் கொட்டி இறக்கிவிடவேண்டும். இதோ ரெடியாகிவிட்டது வேப்பம்பூ ரசம்.

குறிப்பு;

வேப்பம்பூவிற்கு பதில் 4 வற்றல் மிளகாயை மட்டும் இரண்டாக கிள்ளி போட்டு மேற்குறியபடி ரசம் வைத்தால் அது கிள்ளு மிளகாய் ரசமாகும்.

Related Articles

Back to top button
Close
Close