வடியும் வெள்ளத்தால்,வெளிவரும் ஆபத்துக்கள் – அலறும் கேரளமக்கள் !
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் தற்போது அது வடிந்து கொண்டு வருகின்றது அதனால் எங்கு பார்த்தாலும் சேறும் , சகதியுமாக உள்ளது.
இவ்வாறு அடித்து வந்த வெள்ளத்தால் சேறு மட்டும் வீட்டுக்குள் புகவில்லை சேறோடு சேர்ந்து விஷபாம்புகளும் வீட்டுக்குள் புகுந்துள்ளது.
இதனால் மக்கள் எப்போது எங்கிருந்து என்ன வரும் என்று தெரியாமல் பயத்துடன் இருக்கின்றனர்.
வரலாறு காணாத கனமழையாலும் வெள்ளத்தாலும் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தால் சூழ்ந்தது.
அதனால் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சிலர் உயிர் இழந்தனர் பலர் வீடுகளை இழந்தனர்.பெருமளவில் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது மழை படி படியாக நின்றுவிட்டது. மழை நீரும் வடிந்து வருகின்றது. அதனால் மக்கள் முகாம்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்கின்றனர்.
வீட்டுக்கு திரும்பி சென்ற மக்கள் தங்கள் வீடுகளை பார்த்தனர் எங்கு பார்த்தாலும் ஒரே சேறும் சகதியுமாக இருந்தது அது மட்டும் அல்ல விஷ பாம்புகளும் , சில ஜந்துக்களும் இருந்ததை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த மழையிலும், வெள்ளத்திலும் போராடி ஜெயித்தவர்களுக்கு வீட்டை சுத்தம் செய்து பாம்புகளை சமாளிப்பதும் ஓர் பெரும் போராட்டமாகத்தான் உள்ளது.