லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் நாடு – முழுவதும் ஒரு லட்சம் கோடி இழப்பு
அகில இந்திய அளவில் 60 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ததால், இந்தியா முழுவதும் அன்றாட பொருட்களின் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
லாரி உரிமையாளர் சங்கம் ஆன அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
கொள்ளையடிக்கும் சுங்கவரியை சீரமைப்பது, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவருவது, மூன்றாம் நபர் காப்பீடு கட்டண உயர்வு ஆகிய மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து லாரி சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக லாரி உரிமையாளர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் நிலையில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போராட்டம் தீவிரம் அடைந்ததால் இதுவரை நாடு முழுவதும் நான்கு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் கோடி அளவிற்கு இழப்பு என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்து வண்ணமுள்ளன குறிப்பாக நேற்று விலைப்படி 20 ரூபாய் விற்ற ஒரு கிலோ தக்காளி இன்றைக்கு 40 ரூபாயாக விற்கப்படுகிறது, அதேபோல் வெங்காயத்தின் விலையும் 20 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
அதேபோல உருளைக்கிழங்கு. வெண்டைக்காய் போன்ற அனைத்து வகை காய்கறிகளின் விலையும் கிடுகிடு என உயர்ந்து வண்ணமுள்ளன.
இதுபோன்ற நிலை நீடித்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் என மக்கள் அச்சப்படுகிறார்கள்.
இதனால் மத்திய அரசு லாரி சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு சுமூக தீர்வு கொண்டுவரும்படி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.