ரூ.8 கோடி நன்கொடை- முதியவர் ஒருவர் மருத்துவமனைக்கு அளித்தார் !!!
சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு முதியவர் ஒருவர் ரூ.8 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.
இந்த புற்றுநோய் மருத்துவமனைக்கு ஆந்திர மாநிலம் ஹைதிராபாத்தை சேர்ந்த கே.வி.சுப்பாராவ் மற்றும் அவரது மனைவி பிரமிளா ராணி ஆகியோர் இணைந்து ரூ.8 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
சுப்பாராவின் தந்தை கிருஷ்ணையா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர். அவர் தன்னைப்போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாகத்தான் இந்த நன்கொடையை அளித்துள்ளோம் என்று சுப்பாராவ் கூறினார்.
மேலும் சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை வைரவிழா கண்ட பழமையான மருத்துவமனையாகும். நாட்டிலேயே சிறப்பான புற்றுநோய் சிகிச்சை கிடைக்கும் இடங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.