நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு துணை நிற்கிறதா அதிமுக? – என்ன சொல்கிறார் முதல்வர் எடப்பாடி!
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் மேட்டூர் அணையை மலர் தூவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், கடைமடையில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது நிருபர் ஒருவர் முட்டை சப்ளை நிறுவன ஊழல் குற்றச்சாட்டு குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் சத்துணவு திட்டத்திற்கு முட்டை வாங்கியதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என உறுதிபட தெரிவித்தார்.
நாளை பாராளுமன்றத்தில் பாஜக அரசு மீது கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு பதிலளித்த அவர் ஆந்திர அரசின் பிரச்னைக்காக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதாக தெரிவித்தார்.
மேலும் அதிமுக அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்காது என்பதை சூசமாக தெரிவிக்கும் விதத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.
அதிமுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 நாட்கள் போராட்டம் நடத்தி சபையை நடக்கவிடாமல் செய்தனர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதன்மூலம், பாஜக-விற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக அரசு ஆதிரிக்காது என்பதை முதல்வர் சூசமாக குறிப்பிட்டுள்ளதாக அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.