fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

மோடியை பகைத்துக்கொண்டால் இது தான் கதி அனைவருக்கும் எச்சரிக்கை!!!

சென்னை: தனிமைச் சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் என்ன தீவிரவாதியா என்று, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தனது குமுறலை  வெளிப்படுத்தினார்.

திருமுருகன் காந்தியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது வேனில் இருந்து இறங்கும்போது போலீசாரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் திருமுருகன் காந்தி.

வேலூரில் வாகனத்தில் ஏற்றிய பிறகு சிறுநீர் கழிக்க கூட நிறுத்தவில்லை. நான் என்ன தீவிரவாதியா? எஸ்.வி.சேகரை பிடித்தீர்களா? எஸ்.வி.சேகரைக் கைது செய்ய முடியாத காவல்துறை இங்கே வந்து நிற்கிறீர்களா? உங்கள் நேர்மையை பார்த்துதான் உலகமே சிரிக்கிறதே?

ஊபா சட்டத்தை எங்கள் மீது போட்டுள்ளீர்கள். தீவிரவாதிகள் மீது போடும் சட்டத்தில் கைது செய்ய நான் என்ன தீவிரவாதியா? மருத்துவமனை பரிசோதனைக்கு உத்தரவிட்டும் போலீஸார் செய்யவில்லை.

என்னை தனிமைச் சிறையில் வைத்துள்ளார்கள். ஊபா சட்டத்தை ஏன் போட்டீர்கள். மோடி அரசை விமர்சித்தால் தீவிரவாதிகள் போல வழக்குப் போடுவதா. ஆயிரம் முறை மோடி அரசை விமர்சிப்பேன். எனது குடும்பத்தை கூட சந்திக்கவிடாமல் ஏன் செய்கிறீர்கள்? இதற்கெல்லாம் பயப்படபோவதில்லை. இவ்வாறு ஆவேசமாக பேசினார் நிஜ வாழ்க்கையில்  ஹீரோ திருமுருகன் காந்தி.

Related Articles

Back to top button
Close
Close