RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
மெரினாவில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள இடத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது
மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள பகுதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் சரியாக அண்ணா நினைவிடத்திற்கு பின்பாகவும், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இடது புறமும் அமையவுள்ளதாக அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போது நினைவிடத்தில் துரைமுருகன்,ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் தொண்டர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நினைவிடம் அமையவுள்ள பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
உள்ளே ஒரு ஜேசிபி இயந்திரம் நினைவிடம் அமைய உள்ள பகுதியை சீரமைத்து வருகிறது.