HealthTamil News
மூட்டுவலியை போக்க சில எளிய வழிகள்
மூட்டுவலி , சதை வீக்கம் , நரம்பு பிசகு உள்ளவர்கள் நொச்சி சாற்றை தினமும் பூசி வந்தால் குணம் பெறலாம்.
மூட்டுவலி தீர நொச்சி இலை சாறுடன் மிளகு தூள் ,நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
நொச்சி இலையுடன் உத்தாமணி இலையை வதக்கி ஓத்தடம் கொடுத்து வந்தால் மூட்டுவலியும் , இடுப்புவலியும் தீரும்.
மூட்டு வீக்கமாகஉள்ளவர்கள் சுக்கை நன்றாக அரைத்து கொதிக்கவைத்து வீக்கமான பகுதியில் பூசி வந்தால் வீக்கம் குறைந்து ஆறுதலாக இருக்கும்.
மூட்டு, இடுப்பு, வாதவலியுள்ளவர்கள் முருகையிலையை விளக்கெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.