முட்டாள் களின் ஓட்டு வாங்கி பா ஜ க வெற்றி பெற்றதா?:தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம்!
தூத்துகுடி விமான நிலையத்தில் ‘பாஸிச பாஜக ஒழிக’ என்று கூறிய சோபியாவை தமிழிசை உள்பட அவருடைய கட்சியினர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்த வீடியோவில் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வாக்குவாதத்துல ஹைலைட்டே இதான்..
“அறிவிருக்கறதாலதான் சோபியா ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிகன்னு’ சொன்னுச்சி.. “ – அக்கா @DrTamilisaiBJP ஒப்புதல். ??#பாசிசபாஜக_ஆட்சிஒழிக pic.twitter.com/blsqJIAtB1
— STAY HOME STAY SAFE பரம்பொருள் (@paramporul) September 4, 2018
அந்த வீடியோவில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் ‘அந்த பொண்ணுக்கு அறிவு இல்லை, உங்கள் அளவுக்கு மெச்சூரிட்டி இல்லை, அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று கூற, ‘அந்த பொண்ணுக்கு அறிவு இருக்குது, அதனால் தான் பாஜகவை தவறாக பேசியுள்ளார்’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அப்படியானால் அறிவு உள்ளவர்கள் பாஜகவை தவறாகத்தான் பேசுவார்கள் என்பதை தமிழிசையே ஒப்புக்கொண்டது போல் உள்ளது அவரது கூற்று. ஒரு கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் இந்த விஷயத்தில் கொஞ்சம் பெருந்தன்மையுடன் நடந்திருந்தால் இப்படி ஒரு பிரச்சனை இவ்வளவு பெரிய பூதாகரமாகியிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.