Tamil News
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி குடும்பத்துடன் தற்கொலை!
ஈரோடு அருகே சத்தியமங்கலம் அடுத்து காசிக்காடு பகுதியில் குமாரசாமி என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் பல நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குமாரசாமி , தன் தாயார் கண்ணம்மாள் ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
மனைவி மணி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த குமாரசாமி என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.