RETamil Newsஇந்தியா
பிரதமர் மோடி உரையாற்றிய கூட்டத்தில் சாமியானா பந்தல் விழுந்து 20 பேர் படுகாயம்
மேற்குவங்க விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி கொண்டிருந்தபோது சாமியானா பந்தல் விழுந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மிட்னாபூரில் பிரதமர் மோடி தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் வந்திருந்தவர்களின் மீது சாமியான பந்தல் சரிந்தது இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிதறி ஓடிய நிலையில் நெரிசல் ஏற்பட்டது.
இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.