பர்தா அணிந்து விளையாடினாலும் விளையாட்டில் வெற்றிபெற முடியும் – இஸ்லாமிய பெண் பயிற்சியாளர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் தமிமுனிசா ஜாபர் இவர் 1990-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த போதுதான் தனக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரித்ததால் இரண்டே ஆண்டுகளில் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டார். 1999-ஆம் ஆண்டு ஊட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்ட அவரது அணி வெற்றிபெற்றது.
அப்போது என்னை பற்றி செய்திகள் செய்தித்தாள்களில் வந்ததை பார்த்த எனது தந்தை கண்கலங்கினார். மேலும் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வத்தை பார்த்த என் தந்தை என்னை தடுக்கவில்லை.
பெரும்பாலும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டுத்துறையுள் கலந்துகொள்வதை தடுப்பதற்கு முக்கிய காரணம் விளையாடும் போது அணியும் உடைதான் கரணம்.
இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு நடத்தி வரும் பள்ளியில் தான் கால்பந்து பயிற்சியாளராக தமிமுனிசா ஜாபர்(35) பணியாற்றி வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேல் கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றி மாணவிகளுக்கு பயிற்சியளித்து வருகிறார்.
இவர் பயிற்சியில் தயாரான கால்பந்து விளையாட்டு குழு பல வட்டார மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளது.
அவர் குறித்தாவது ; பர்தா, நீளமான கால்ச்சட்டை அணிந்து விளையாடினாள் விளையாட்டில் எந்த தடங்கலும் ஏற்படாது . மேலும் நான் இந்த உடை அனைத்து தான் பயிற்சி அளிக்கிறேன் என்று கூறினார்.
தற்போது அவரது அணி தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றது.