fbpx
Others

சிலம்ப ஆசான்களை ஏமாற்றிய தமிழ்நாடு அரசு….?

உலக சிலம்ப ஆசான்கள் ஒருங்கிணைந்த சங்கம் வேதனை!!தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த உடன் தமிழ் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தேசிய அளவில் கொண்டு செல்லப்படும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம்.
ஆனால் தமிழ்நாட்டிலேயே முறையாக கால் பதிக்க முடியாத நிலையில் சிலம்பம் இருக்கிறது .இது வேதனை அளிக்கிறது என உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயலாளர் .கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு மூலமாக மூத்த ஆசான்கள் 100 பேருக்கு தலாஒருலட்சம்எனஒருகோடிரூபாய் தமிழக முதல்வர் மூலமாக வழங்கப்படும் என               கலைமுதுமணி.ஆர்.முருகக்கனிஆசான் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர்.மெய்ய நாதன் தெரிவித்திருந்தார்.அதன் மூலம் ஆசான்கள் மகிழ்வதோடு சிலம்ப கலை வளர்ச்சி அடையும் என நம்பி இருந்தோம்.இதுவரை சிலம்ப வளர்ச்சிக்கு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை .மேலும் 2019-ல் கேள இந்தியா இளைஞர் விளையாட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்ட சிலம்பம் இதுவரை போட்டியாக நடைபெறவில்லை. குறிப்பாக 2023 ஜனவரி மாதம் தமிழ்நாட்டிலே நடைபெற்ற கேலோ இந்தியாஇளைஞர்விளையாட்டுப்போட்டியில்சிலம்பம்இடம்பெறும்என்றுநம்பினோம்ஆனால்தொடக்கநாளிலேகுரூப்பாகடெமோசெய்யப்பட்டது.காட்சிமுறைப்போட்டியாககூடநடைபெறவில்லை.சிலம்பத்திற்கு எதிர்காலம் வருமா? வராதா! என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு உடனடியாக ”சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம்” அமைத்து சிலம்ப கலையை காத்திட வேண்டும் .தேசிய முழுக்க கொண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டும்.

 

Related Articles

Back to top button
Close
Close