GeneralRETamil NewsTrending Nowஉலகம்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..? வெளியான பரபரப்பு தகவல்!
Dawood ibrahim dead due to corona sources said

இஸ்லாமாபாத்:
சர்வதேச அளவில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட நாட்டின் பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர். பல நாடுகளில் நிகழ்ந்த் தீவிரவாத சம்பவங்கள் காரணமாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து புகார் கூற வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ அதை ஏற்கவில்லை. தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந் நிலையில் தாவூத் இப்ராகிம் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் கராச்சி ராணுவ மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.















