RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
நாளை முதல் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை அறிவிப்பு !
திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள் தான் இருப்பதால் அங்கு அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து வருகின்றது.
எனவே சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக திருமலையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறுபவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.