நாகர்கோயில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் வரும் ரயில்கள் மூலம் அண்டை மாநிலத்திற்கு கஞ்சா,நியாயவிலை கடை அரிசிகள் கடத்த பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹவ்ராவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த விரைவு ரயில்வண்டியில் சந்தேகத்திற்கு உரிய இரண்டு பண்டில்கள் கிடந்துள்ளது.தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் சோதனை செய்த பொது அதில் இருந்தது கஞ்சா என்பது தெரிய வந்தது. அது 13 கிலோ கஞ்சா என போலீசார் தெரிவித்தனர். கஞ்சா பண்டிலை கைப்பற்றிய போலீசார் எங்கு இருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.