fbpx
Tamil News

நவம்பர் 5-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு…144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது கேரள அரசு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைக்காக வரும் திங்கட்கிழமை (நவம்பர் 5-ஆம் தேதி) நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிப்படலாம் என்ற தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பையொட்டி பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர்.

ஐயப்பன் கோவில் நடை சென்ற மாதம் 6 நாட்கள் திறக்கப்பட்டிருந்தது. சில பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் சித்திரை ஆட்ட விசேஷ விழாவிற்காக ஐய்யப்பன் கோவில் நடை வரும் 5-ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளது. பின்னர் 6-ஆம் தேதி மாலையில் நடை சாத்தப்படும். இதனை முன்னிட்டு சபரிமலை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று முதல் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

இன்று இரவு முதல் சன்னிதானம், நிலக்கல் மற்றும் பம்பை  ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலுக்கு வர உள்ளது. சபரிமலையும்  அதன் சுற்றுவட்டார பகுதிகளும் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பம்பைக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close