தலித் மக்களுக்கு முடி வெட்ட மறுத்து பார்பர் உரிமையாளர் ஊரையே காலி செய்தார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் சாதி தீண்டாமையால் தலித் மக்களுக்கு முடி வெட்ட மறுத்து பார்பர் உரிமையாளர் ஒருவர் ஊரையே காலி செய்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிக்கு அருகே உள்ள தாயம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அப்பகுதியில் முடி திருத்தும் கடையை நடத்தி வருகிறார். அப்பகுதியில் இவர் ஒருவர் மட்டும் தான் முடி திருத்தும் கடையை நடத்தி வந்ததாக கூறப்பபடுகின்றது. இதற்கிடையே கிருஷ்ணன் தன் கடைக்கு முடி வெட்ட வரும் அருந்ததிய மக்களுக்கு முடி வெட்ட மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி நிர்வாகிகளிடம் புகார் தந்தனர். அந்த புகாரில் சம்பந்தப்பட்ட பார்பர் உரிமையாளர் உயர் சாதியினருக்கு மட்டுமே முடி திருத்தும் செய்வதாகவும் , தலித் மக்களுக்கு முடி வெட்ட மறுப்பதாகவும் கூறப்பட்டது.மேலும் இத்தகைய செயல்கள் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்த புகாரையடுத்து காங்கேயன் பகுதியின் தாசில்தார் மற்றும் எஸ்.பி ஆகியோர் கிருஷ்ணனிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர் . அதற்கு அவர் தன் சொந்த ஊருக்கே சென்று விடுவதாக கூறியுள்ளார்.