fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

வீட்டுக்கே வரப் போகுது சரக்கு…? சுப்ரீம் கோர்ட்டின் சூப்பர் ஐடியா..!

Liquor may sales in online says apex court

டெல்லி: மதுபானங்களை ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

வரும் 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிகிறது. ஆனால் சில தளர்வுகளின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

40 நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். ஆகையால் சமூக இடைவெளி கேள்விக்கு உள்ளாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதிகள் நடத்தினர்.

மாநில அரசுகள் மது விற்பனையை நேரடியாக கடைகள் மூலமாக விற்காமல் மறைமுக வழியில், ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கே டெலிவரி செய்யும் முறையை பின்பற்ற அப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close