தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அப்படியிருக்கும்போது தொழிலாளர்களின் பாதுகாப்பும் , முன்னேற்றமுமே நாட்டின் சமசீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். மேலும் உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சி உயருவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
மாண்புமிகு புரட்சி தலைவி அம்மாவின் வழியில் நடைபெற்று வரும் இந்த அம்மாவின் அரசு அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய மதிப்பு அளிக்கும் வகையில் , பல்வேறு பொது துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2017-2018 ஆம் ஆண்டிற்க்கான போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி போனஸ் பெற தகுதியான உச்சவரம்பு ரூ.21000 -ஆக உள்ளது. அதன் படியே 2017-2018 ஆம் ஆண்டிற்க்கான போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400/-ம் அதிகபட்சம் ரூ.16,800/-ம் பெறுவார்கள். மொத்தத்தில் தமிழ் நாடு முழுவதும் அரசின் பொது துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 58 ஆயுரத்தி 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் போனசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இத்தகைய நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.