RETamil Newsதமிழ்நாடு
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை : சென்னை வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வட உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகத்தின் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்மஞ்சேரி பகுதியில் 8 சென்ட்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.