விடுதலை சிறுத்தைகள்கட்சி & அம்பேத்கர் தொழிலாளி யூனியன் ஆர்ப்பாட்டம்.

மூணாறு நகரில் கேரள மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அம்பேத்கர் தோட்டம் தொழிலாளி யூனியன் சார்பில் சாதி சான்றிதழ் வழங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இடுக்கி மாவட்டம் தேவிகுளம்தாலுக்காவில்உள்ளஅனைத்துவகுப்பினருக்கும் சாதி சான்றிதழ் எந்த நிபந்தனையும் இன்றி வழங்கிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுமேலும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் அவரது நினைவேந்தல்பொதுக்கூட்டமும்நடைபெற்றதுமுன்னதாக புரட்சியாளரின் திருஉருவ வெண்கல சிலைக்கு மாலைஅணிவித்துமலர்தூவிவீரவணக்கம்செலுத்தப்பட்டதுதோட்டத்தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிடைக்கக்கூடிய சலுகைகள் முறையாக வழங்கப்பட வேண்டும் அனைத்து மக்களுக்கும் சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோசங்களை எழுப்பினர் இதில் இடுக்கி மாவட்ட செயலாளர் ஜெயபால், அம்பேத்கர் தோட்டம் தொழிலாளி யூனியன் தலைவர் செல்வராஜ்,பழதோட்டம் இசக்கி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிவளவன், சந்தோஷ் மற்றும் இடுக்கி மாவட்ட செய்தி தொடர்பாளர் முல்லை முருகன் ஆலப்புழா மாவட்ட செயலாளர் பிரசாந் பத்தியூர், ராஜேஷ் திருவனந்தபுரம் மற்றும் சிறப்பு அழைப்பாளராக தேனி மேற்குமாவட்ட செயலாளர் மதன், தேனி ஒன்றிய துணை செயலாளர் கருத்தப்பாண்டி, நகரச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்களும் திரளான தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர். …..