Tamil Newsஉணவு
தக்காளிப் பச்சடி செய்யலாமா !
தேவையான பொருட்கள்;
தக்காளி பழம் 2
கடுகு 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/4 ஸ்பூன்
தயிர் 2 கரண்டி
வற்றல் மிளகாய் 3
பெருங்காயம் சிறிது
தேவையான அளவு உப்பு
செய்முறை ;
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய வைத்து , அதில் கடுகு போட வேண்டும் அது பொரிந்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வற்றல் மிளகாய் ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும்.பின்னர் அதில் நறுக்கிய தக்காளி பழத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும் கிட்டத்தட்ட 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர்
வதக்கிய தக்காளியை ஒரு கிண்ணத்தில் கொட்டி ஆற வைக்க வேண்டும். நன்கு அறிய பின் அதில் தயிர் உப்பு போட்டு கரைக்க வேண்டும். இதோ தய்யார் ஆகிவிட்டது தக்காளிப் பச்சடி.