fbpx
Tamil News

டெல்லி செங்கோட்டை அருகே பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி செங்கோட்டை அருகே பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். டெல்லிக்கு அவர்கள் நாசவேலை செய்வதற்க்காக வந்திருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையுள் அந்த பயங்கரவாதிகள் ஜம்முகாஷ்மிரிலிருந்து வந்திருப்பதாகவும், மேலும் அவர்கள் ஐ.எஸ்.ஜே.கே என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு டெல்லி செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகளை கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close