ஜேஎன்யூ மாணவர் தேர்தல் :பா ஜ க வுக்கு பெரும் பின்னடைவு!
டெல்லி ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்பு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் பிரபலமான மத்திய பலகலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சங்கங்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று.
ஏபிவிபி – இடதுசாரி மாணவர்கள் இடையே எப்போதும் கடுமையான மோதல் ஏற்படும். இதில் சில மரணங்களும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி மத்திய பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவாக அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தல் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இங்கு குறிப்படத்தக்கது. ஏபிவிபி அமைப்புகள் தோல்வி தழுவியதை இந்தியா முழுவதும் உள்ள இடதுசாரி மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.