சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் இன்று காலை முதலே மிதமான மழை பையை தொடங்கியது அதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள், அவ்வாறே மாலை 3.30 மணிக்கு மழை மிக அதிகமாக பெய்ய தொடங்கியது அதனால் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மாணவர்கள் மிகவும் அவதிபட்டார்கள்.
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறிய சென்னை வானிலை ஆய்வு மையம் , சென்னையில் நவம்பர் 3-ஆம் தேதி வரை விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.