சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று ஷேர் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவை துவங்கப்பட்டது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு சுலபமாக செல்லும் வகையில் ,சென்னையில் 8 இடங்களில் ஷேர் ஆட்டோ வசதியும்,5 இடங்களில் கால் டாக்ஸி சேவையும் துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் தங்கள் வீட்டின் தூரம் 3 கி.மீ வரை இருந்தால் அவர்கள் ரூ.10 லிருந்து ரூ.15 வரை கொடுத்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயர்ந்துள்ளது.அதனால் தான் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது என்று கூறலாம்.இதற்கிடையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்களின் குடியிருப்பை இணைக்கும் வகையில் இன்று (11.08.2018)ஷேர் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவை துவங்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு;
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு சுலபமாக செல்லும் வகையில் 6 மாத கால சோதனையின் அடிப்படையில் இன்று முதல் (11.08.2018)ஷேர் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவை துவங்கப்பட்டது.
அதன்படி , கோயம்பேடு, அசோக் நகர், ஆலந்தூர் , ஈக்காட்டு தாங்கள் , பரங்கிமலை, கிண்டி, சின்ன மலை அல்லது நந்தனம் , திரு மங்களம் அல்லது அண்ணா நகர் டவர் ஆகிய 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளின் தொலைவு 3கி.மீ ராக இருந்தால் ஷேர் ஆட்டோ சேவையும் அதற்க்கு கட்டணமாக ரூ.10-ம் வசூலிக்கப்படும். அதேபோல் கோயம்பேடு, ஆலந்தூர்,அண்ணா நகர் கிழக்கு, டிஎம் எஸ் , வடபழனி ஆகிய 5 இடங்களில் இருந்து 3கி.மீ தூரத்துக்கு கால் டாக்ஸி சேவையும் இன்று முதல் துவங்க படுகின்றது. இதற்க்கு கட்டணமாக ரூ.15 நிணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.