சென்னையில் பல இடங்களில் பைக்குகளை சூறையாடிய திருடர்கள் கைது!!
சென்னையில் பல இடங்களில் பைக்குகளை திருடி அதை குறைந்த விலைக்கு விற்று பணமாக்கிய பைக் திருடர்கள் இன்று கூடுவாஞ்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, கூடுவாஞ்சேரியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு விலை உயர்ந்த பைக்கில் இருவர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த காவல் துறையினர் , அவர்களை வழி மறித்து வண்டியின் ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவர்கள் ஆவணங்களை தராததால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர்.
பின் அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் கேளம்பாக்கத்தை சேர்ந்த பழனி தங்கம் என்பதும் , கூடுவாஞ்சேரியை சேர்ந்த விஜயகுமார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களை தொடர்ந்து விசாரித்த போது , அவர்கள் பல இடங்களில் பார்க் செய்யப்பட்டிருக்கும் பைக்குகளை திருடி அதை குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட இன்னொரு குற்றவாளியையும் கைது செய்த காவல்துறையினர் . அவர்களிடம் இருந்து 35 லட்சம் மதிப்புள்ள 26 பைக்குகளை கைப்பற்றியுள்ளனர்.