fbpx
RETamil Newsதமிழ்நாடு

சென்னையில் சொத்துக்காக பெற்ற தாயையே கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் பெற்ற தாயை சொத்துக்காக அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கிழக்கு கடற்கரைச்சாலை பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராணியம்மாள் (52), இவரது கணவர் 5 வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டார். ராணியம்மாளிற்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். ராணியம்மாளின் மூத்த மகன் பெங்களூரில் உள்ளார். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

இளைய மகன் பரன்பாஸ்க்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். தன் தாய் ராணியம்மாளின் சொத்தை தன் பெயருக்கு மாற்றி தர சொல்லி பரன்பாஸ் அடிக்கடி வேண்டுகோள்விடுப்பார். ஆனால் அவரின் தாய் ராணியம்மாள் தன் குழந்தைகள் அனைவருக்கும் சமமாகத்தான் கொடுப்பேன் என்று கூறுவர். அதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

இந்நிலையில் நேற்று குடித்து விட்டு வீடு திரும்பிய பரன்பாஸ் கட்டிலில் துங்கிகொண்டுருந்த தன் தாயை சரமாரியாக கட்டையால் தாக்கி அங்கிருந்து ஓடிவிட்டார். அதனால் பெரும் காயம் அடைந்த ராணியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இதற்கு காரணமான பரன்பாசை கண்டுபிடித்து கைது செய்தனர். இவ்வாறு பெற்ற தாயையே சொத்துக்காக அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close