fbpx
REதமிழ்நாடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம் – முதல்வர் அறிவிப்பு!

இந்தியாவில் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வருடமும் 72-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றப்பட்டு உரிய மரியாதையை செலுத்தப்படும். அப்போது அந்த வருடத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விருதுகள் வழங்குவது வழக்கம். அப்படித்தான் இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புலன் விசாரனை பிரிவில் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் முழு ஈடுபாடு மற்றும் தன்னை முழுமையாக பணியில் அர்பணித்திருந்ததை பாராட்டும் வகையிலும் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் பதக்கம் வழங்குவதாக ஆணையுட்டுள்ளார் .

Related Articles

Back to top button
Close
Close