சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் காதுகேளாத மாற்றுத்திறனாளி சிறுமியை ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி வன்கொடுமை தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி விசாரிக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
நிகழ்விடத்தில் இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்காக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த காவல்துறையினர் 17 பேரையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.
இதனை விசாரித்த நீதிபதி மஞ்சுளா அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.