கன மழையாலும் ,பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதிஉதவி அளிக்க முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
நிவாரணம் மற்றும் , மறுசீரமைப்பு பணிகள் பற்றி ஆலோசிக்க சிறப்பு பேரவை கூட்டம் கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை அளித்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளமக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியுதவி தேவைப்படுவதாகவும் ,ஆனால் வெள்ள நிவாரண நிதியுதவியாக பிரதமர் மோடி ரூ.500 கோடி அளித்துள்ளதாகவும் கூறினார். அதனால் சிறப்பு பிரதிகளுடன் சென்று மேலும் நிவாரண உதவி கேட்கவுள்ளதாக பினராயி விஜயன் கூறினார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள் என்றும் , மேலும் இந்தியாவிலிருந்து வந்து குவியும் நிதியுதவிகளை கண்டு நெகிழ்ந்துள்ளதாவும் கூறினார். இந்நிலையில் அனைத்து மணிலா அரசுகளும் கேரளாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்கள் தங்களுக்கு உதவுவதாகவும் , கேரளா நிலவரம் குறித்து அபுதாபி அரசர் தன்னை தினசரி தொடர்பு கொண்டு விசாரித்துக்கொள்வதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.