fbpx
Tamil News

குடற்பூச்சிக்கு நல்ல தீர்வு வேணுமா?.

1. கல்யாணபூசணிவிதை 25கிராம் அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டு, 3 மணிநேரம் கழித்து 2தேகரண்டி வி.எண்ணை சாப்பிட குடல் தட்டை புழுக்கள் வெளியாகும்

2. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10துளி,சிறிது வெந்நீரில் குழந்தைகளுக்கும், 4தேகரண்டி, சிறிது தேனில் பெரியவர்களுக்கும் கொடுக்க குடற்புழுக்கள் வெளியாகும்

3. அதிகாலை சிறிது வெல்லம் உட்கொண்டு, பின்,1சிட்டிகை குடசப்பாலை விதைச்சூரணம் உட்கொள்ள குடல் புழு கட்டுப்படும்

4. 1பிடி குப்பைமேனிவேரை,1லிநீரிலிட்டு கால் லி.ஆகக் காய்ச்சிப் பருக நாடாப் புழுக்கள் வெளியாகும். சிறுவர்களுக்கு 60 மிலி கொடுக்கவும்

5. கொட்டைக்கரந்தை விதைச்சூரணம்1 தேகரண்டி, தேனில் குழைத்துச் சாப்பிட குடல் புழுக்கள் வெளியாகும்

6. இஞ்சி,கோரைக்கிழங்கு,சமனரைத்து, சுண்டைக்காயளவு, சிறிது தேன் சேர்த்து சாப்பிட குடற்புழுக்கள் வெளியாகும்

7. வேப்பம்பட்டைக் கஷாயம் 6தேகரண்டி, தினமிருவேளை பருக குடற்புழு வெளியாகும்

8. வேப்பிலைச்சூரணம் 1தேகரண்டி,தினமிருவேளை பால் அல்லது வெந்நீரில் கொள்ள குடல்புழுக்கள் வெளியாகும்

9. வேப்பங்கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு தினம்காலை வெறும் வயிற்றில் கொள்ள குடற்புழுக்கள் வெளியாகும்

10. மலைவேம்பு இலைச்சாறு 4தேகரண்டி சாப்பிட குடல்புழு வெளியாகும்

11. மலைவேம்பு இலைகளை 2ல்1ன்றாய்க் காய்ச்சிப் பருக வயிற்றுப்புழு வெளியேறும்

12. மலைவேம்புவேர்பட்டை சூரணம் 1தேகரண்டி தினமிருவேளை வெந்நீருடன் கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியாகும்

13. சுண்டைக்காயைவற்றல்செய்து,சூரணித்து,அரைதேகரண்டி,தினமிரு வேளை, வெந்நீருடன் கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியாகும்

14. பிரண்டைத்தண்டுகளை மேல்தோல் நீக்கி, உப்பு,புளி,காரம் சேர்த்து, நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வயிற்றுப்பூச்சி, இரத்தமூலம் கட்டுப்படும்.மூளை,நரம்புகளும் பலப்படும்

15. வாய்விடங்கச்சூரணம்1-2கிராம் தினமிருவேளை 50மிலி வென்னீரில் கொள்ள குடற்புழுக்கள் வெளியாகும்

16. சிவதைசூரணம் 2கிராம் இரவில் 50மிலி வெந்நீரில் கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்

17. உத்தாமணி இலைக்குடிநீர் 20மிலி கொடுக்க குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்

18. 3துளி எருக்கன்இலைச்சாறு,10துளிதேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்

Related Articles

Back to top button
Close
Close