மகாராஷ்டிரா: வடக்கு மும்பை பாஜக எம்.பி கோபால் ஷெட்டி தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர். இவர் மால்வாணி என்ற இடத்தில் நடந்த இஸ்லாமியர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அப்போது பேசிய அவர் ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் மட்டுமே சுதந்திரத்துக்காக போராடியவர்கள் என்றும் கிறிஸ்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் போன்று இருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் யாரும் சுதந்திரத்துக்காக போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார். இதற்க்கு கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் வரலாற்று அறிவு இல்லாமல் பேசுவதாக டெல்லி கத்தோலிக்க பேராயர் சாலமன் கூறியுள்ளார்.அவர் தொடர்கையில் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் பொறுத்தமட்டில் அவர்கள் ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளார்கள். சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார்கள்.
கோபால் ஷெட்டி பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. இதனால் மன்னிப்பு கோரியுள்ள ஷெட்டி தான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக்க தெரிவித்துள்ளார். கோபால் ஷெட்டியை கண்டித்து சில காங்கிரஸ் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் மும்பையில் போராட்டம் நடத்தினர். தேர்தலுக்காக பாஜக மக்களை பிளவு படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.