காவேரி மருத்துவமனைக்கு வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பதற்றம்!!
காவேரி மருத்துவமனைக்கு கலைஞர் கருணாநிதியை பார்க்க வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு பதற்றம் நிலவியது.
காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், கருணாநிதி நலம் பெற்று வந்து மீண்டும் அரசியலில் பணியாற்ற வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக கூறினார்.
பின்னர் பேசிய அவர் கருத்து வெறுப்பு வேறு, மனித விருப்பு வேறு, மனித மாண்பு வேறு என்று உள்ளதாக குறிப்பிட்டார்.
என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் வாட்சுபாய், சோனியா காந்தி, அத்வானி சேர்ந்திருந்து தேனீர் குடித்தபடி விவாதிக்கிறார்கள் என்பதை நினைவு கூர்ந்தார்.
கருணாநிதி என்றில்லை யாரை பற்றியும் சமூகவலைதளங்களில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யக் கூடாது என கேட்டுக்கொண்டார்.