RETamil Newsஇந்தியாதமிழ்நாடு
காவிரி கரையோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் – ஆட்சியர் ரோகினி எச்சரிக்கை
காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று சேலம் ஆட்சியர் ரோகினி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் முழு நேரம் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கரைப் பகுதிக்கு வருவதையும், கரையோரப் பகுதிக்கு வந்து புகைப்படம் எடுப்பதையும், தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் ரெட்டியூர் பகுதியில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஹரிஹரன் என்பவரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ரோகினி தெரிவித்தார்.