கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்:தமிழக அரசு அறிவிப்பு!
கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு தமிழ் கவிதை , கட்டுரை மற்றும் பேச்சு போடடிகள் வரும் 14 செப்டம்பரில் மாநில அளவில் சென்னை, எழும்புரில் உள்ள , மாநில அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த போட்டி காலை 9 மணிக்கு துவங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் மன்றம் சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பு;
‘ பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே தமிழிலக்கிய படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை வளர்க்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தமிழ் மன்றம் துவங்கப்பட்டது. இந்த தமிழ் மன்றம் 2004-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது அதன் மூலம் அணைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே தமிழ் ஆற்றலை வளர்த்திடும் இந்த போட்டியை நடத்திட வேண்டும் என்று அம்மா அரசு ஆணை பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டிற்கான கவிதை , கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் வரும் 14 செப்டம்பரில் மாநில அளவில் சென்னை, எழும்புரில் உள்ள , மாநில அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த போட்டி காலை 9 மணிக்கு துவங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.