கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி தொடங்கியது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி இன்று காலை தொடங்கியது.
தி.மு.க.தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமாக இருந்தவர் மு.கருணாநிதி அவர்கள் அவர் உயிருடன் இருந்த காலத்தில் அவரது மகன் அழகிரிக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பு வழக்கப்பட்டு இருந்தது.
அதன் பிறகு 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அழகிரி அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.
அதன் பின்னர் கருணாநிதி அழகிரியை மீண்டும் அக்கட்சியில் சேர்க்கவில்லை.
இந்நிலையில் கருணாநிதி கடந்த மாதம் உயிரிழந்தார். அதனால் அழகிரி தனது குடும்பத்துடன் ஆகஸ்ட் 13-ஆம் தேதி கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று தனது இரங்கலை தெரிவித்து.
மேலும் கருணாநிதியின் உண்மையான ஆதரவாளர்கள் என் பக்கம் தான் உள்ளனர் என்று கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் செப்டம்பர் 5-ஆம் தேதி கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த போவதாக அழகிரி அறிவித்திருந்தார்.
இந்த அமைதி பேரணிக்கு காவல்துறையினரும் அனுமதி அளித்திருந்தனர். அதற்க்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே வாலாஜா சாலையிலிருந்து இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் அழகிரி தலைமையிலான அமைதி பேரணி மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை சென்றடையும்.
இதனை அடுத்து தனது அரசியல் பயணத்தின் முக்கிய அறிவிப்பை தெரிவிப்பார் என்று எதிர்பாக்கப்படுகின்றது.