கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலினால் பலர் இருக்க இருப்பிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பயிர்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், பள்ளிகளில் விழுந்த மரங்களில் 70% அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.