RETamil Newsதமிழ்நாடு
ஓர் இளைஞனின் துணிச்சலான செயல் – பள்ளத்தில் கவிழாமல் காப்பாற்றப்பட்ட 80 பயணிகள் !!
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு 80 பயணிகள் அடங்கிய பேருந்து ஒன்று சென்றது. அப்போது தீடீரென அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதையடுத்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழும் நிலையில் அந்த பேருந்து நின்றது.
முன்பக்க சக்கரம் அந்தரத்தில் தொங்கும்படி பள்ளத்தின் அருகே தத்தளித்து நின்றது. இந்நிலையில் அப்பகுதியில் ஜெ.சி.பி மூலம் மண் அள்ளும் பணியில் கபில் என்ற இளைஞர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
.அப்போது கபில் தான் இயக்கிக்கொண்டிருந்த ஜெ.சி.பி வண்டியை பேருந்து கவிழ்ந்து கொண்டுருந்த இடத்திற்கு கொண்டுசென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்.
தன் முயற்சியின் மூலம் பேருந்தில் தத்தளித பயணிகளை காப்பாற்றினார். மீட்கப்பட்ட பயணிகள் கப்பிலிற்கு கண்ணீர்மல்க தங்களின் நன்றியை தெரிவித்தனர்.