எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு !
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுவது தீபாவளியாகும். தீபாவளியின் சிறப்பம்சமே இனிப்பு பலகாரங்களும் , பட்டாசும் ஆகும். அவ்வாறு இருக்கும் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது இனிப்பு சந்தோஷமாக வெடிப்பது பட்டாசு அப்படி வெடிக்கும் பட்டசிற்கு இப்போது நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தீபாவளியன்று காலை மற்றும் மாலை வேளைகளில் எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழல் மாசுபடுவதாக கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டது அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் , தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இரவில் பட்டசு வெடிப்பது வட மாநிலத்தவர்கள் வழக்கம் அதனால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை கூடுதலாக பட்டாசு வெடிக்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், அது எந்த நேரம் என்று தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தமிழகத்தில் எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
எனவே தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் , இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.