Tamil Newsஉணவு
உளுத்தம் பருப்பு போண்டா செய்வது எப்படி?
மாலையில் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஒரு நல்ல சிற்றுண்டி தான் உளுத்தம் பருப்பு போண்டா.
தேவையான பொருட்கள் ;
உளுத்தம் பருப்பு 200 கிராம்
தேங்காய் துண்டு 2
பச்சை மிளகாய் 4
மிளகு 20
உப்பு தேவையான அளவு
செய்முறை;
முதலில் உளுத்தம் பருப்பை 2 மணிநேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். ஊறிய உளுத்தம் பருப்பில் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மைய வெண்ணெய் போல் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் முழுமிளகு, சிறுதுண்டுகளாக்கிய தேங்காய் இவைகளை போட்டு நன்கு மசிக்க வேண்டும், மசித்த மாவை எலுமிச்சை அளவிற்கு உருண்டையாக பிடித்து , வாணலியில் எண்ணெய் சூடு செய்து அதில் போட்டு பொன்னிறமாகுவரை பொறித்து கொண்டு எடுத்தால் உளுத்தம் பருப்பு போண்டா சாப்பிடுவதற்கு தய்யார் .
இதுவே குழந்தைகளுக்கான எளிதான , ஆரோகியமான மாலை உணவு.