fbpx
Tamil Newsஉலகம்

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரம் மற்றும் அந்நாட்டின் எல்லை பகுதியை ஒட்டிய ஈரான் நாட்டின் கெர்மன்ஷா நகரம் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து 2 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 என்ற அளவில் பதிவாகி 2 முறை உணரப்பட்டு உள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கெர்மன்ஷா நகரின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிக்கு 88 கிலோ மீட்டர் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கெர்மன்ஷாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு வீடுகள் தரமட்டமாயின. 530 பேர் பலியாகினர் எனவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் எனவும் தகவல்கள் வெளியானது. இது கடந்த 10 வருடங்களில் ஈரான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ஆகும்.

Related Articles

Back to top button
Close
Close