RETamil Newsதமிழ்நாடு
இருமல் பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பலி!

சென்னை:ஆவடி பானுநகரை சேர்த்தவர் நிர்மலா இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக தொடர்ந்து இருமல் தொல்லையால் அவதிப்பட்டுள்ளார்.
வடபழனியில் உள்ள விஜய மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நிர்மலாவின் நுரையீரல் அருகே கட்டி இருப்பதாகவும் அவற்றை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து மருத்துவர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டதால் நிர்மலா உயிரிழந்தார் என நிர்மலா கணவர் கோமகன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நிர்மலா உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெறித்துள்ளது.