RETamil Newsஅரசியல்உலகம்
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்!
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்தப் போவதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
272 இடங்களில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் சிறு கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை இம்ரான்கான் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் முக்கிய எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்தவும் சிறு கட்சிகளுடன் இணைந்து இம்ரான் கானை பதவி ஏற்க விடாமல் தடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் நவாஸ் ஷரீபின் முஸ்லிம் லீக் நவாஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.