RETamil Newsஅரசியல்இந்தியா
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் வகிக்கும் முகேஷ் அம்பானி !!
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதல் இடத்தை வகித்து வருகிறார் முகேஷ் அம்பானி. சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.300 கோடி உயர்ந்துள்ளது.இப்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.3.7 லட்சம் கோடி ஆகும்.
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், அவரை தொடர்ந்து ஹிந்துஜா குடும்பத்தினரும், மிட்டல் குடும்பத்தினரும் உள்ளனர்.
கடந்த ஆண்டு ரூ.1000 கோடிக்கு மேல் இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 600-ஆக இருந்தது. அனல் இந்த ஆண்டு ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 831-ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்னிக்கை கடந்த ஆண்டுடன் பார்க்கும் போது 214 அதிகமாகும்.இவ்வாறு ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்லோரின் மொத சொத்தின் மதிப்பு ரூ.49 லட்சம் கோடியாகும்.