fbpx
RETamil News

அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது -தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

டெல்லி: இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் பதினாறாயிரம் பேர் பலியாவார்கள் எனும் அதிர்ச்சி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம். இந்தியாவில் அதிநவீன தொழில் நுட்பங்களை வைத்து பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியமுடியம். மழை வெள்ளப்பாதிப்புகளை கண்டுபிடிக்க நிறைய வசதிகள் உள்ளது. இருப்பினும் வெள்ளம் வருவதை தடுக்க முடியாது என்றும் பேரிடரை பற்றி முன்கூட்டியே அறிந்தாலும் எந்த மாநில அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

அப்படியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் நகரமயமாக்கல் காரணமாக பெரிய அளவில் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. அரசு அதிகாரிகள் பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே பேரிடர்களிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியும்.

பேரிடர்களை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எந்தெந்த மாநிலங்கள் மேற்கொள்கிறது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், அசாம், பஞ்சாப், ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்கள் மிக மோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்கள் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாநிலங்களும் சரியான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் உயிரிழப்பார்கள் எனவும், இதனால் 47 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனவும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இதை தடுக்க இப்பொழுதே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close